முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மதுரை மீனாட்சி திருக்கோயில் தெப்பத் திருவிழா

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஜன. 26 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா இன்று வாஸ்துசாந்தி பூஜையுடன் தொடங்குகிறது. சிவாச்சார்யார்கள் காப்பு கட்டி திருவிழாவுக்கு தயாராகுகின்றனர். நாளை 27 ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கோயில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன் பின்னர் தினமும் சுவாமி அம்மன் காலை, மாலையில் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். 

பிப்ரவரி 7 ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி சிம்மாசனத்திலும், அம்மன் வெள்ளி அவுரா தொட்டில் வாகனத்திலும் எழுந்தருளி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அருகே உல்ள தெப்பக்குளத்திற்கு புறப்பாடாகின்றனர். 

பின்னர் அன்று காலையில் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருள பக்தர்கள் தண்ணீரில் உள்ள தெப்பத்தை வடம் மூலம் இழுப்பர். இரு முறை தெப்பத்தில் சுற்றி வந்த பின்னர் மீண்டும் முக்தீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி அம்மன் எழுந்தருள்வர். அன்று மாலையில் மீண்டும் தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வருவர். அன்று இரவு 10 மணிக்கு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்திலும் எழுந்தருளி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு செல்வர். 

சுவாமி அம்மன் திருக்கோயிலில் இருந்து அதிகாலை கிளம்பியது முதல் மீண்டும் திருக்கோயிலில் எழுந்தருள்வது வரையில் திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், செயல் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்