முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பிரச்சினை: மத்தியரசை குறை கூறும் கருணாநிதி

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் மத்திய அரசின் தாமதத்தை இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்று தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்றும், இனி தமிழக மீனவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்றும் உறுதியளித்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கி அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாக உள்ளது. 

அமைதி திரும்பும் என்று மத்திய அமைச்சர் சொல்லும் வாசகங்கள் கடல் காற்றிலேயே கரைந்து போவது தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் காரணத்தால் இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு உடனடியாக இந்த பிரச்சினையில் மத்திய அரசு தாமதிக்காமல் தலையிட வேண்டும். தாமதத்தையும் பொறுத்துக் கொண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் கொடுமையையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அவர் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!