முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்லடிக் போட்டி: சென்னை துறைமுகம் சாம்பியன்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26​- துறைமுக அணிகளுக்கு இடையேயான அகில இந்திய அத்லடிக் போட்டியில் 16 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் சென்னை துறைமுக அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை துறைமுகம் சார்பில் அகில இந்திய அத்லடிக் போட்டி நடத்தப்பட்டது. பெரிய துறைமுக அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 9 அணிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 23ந் தேதின்று துவங்கி நேற்று(25ந் தேதி) வரை நடைபெற்ற இதில் துறைமுக ஊழியர்களுக்கு மட்டுமன்றி அவர்களது குழந்தைகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 16வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களையும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் 5 தங்கப்பதக்கங்களையும் வென்று சென்னை துறைமுக அணி சாம்பியன் பட்டம் வென்றது. 14 வயது சிறுவர் பிரிவில் பாரதீப் அணி(5 தங்கம்)யும், சீனியர் ஆண்கள் பிரிவில் கொச்சின் அணியும்(7 தங்கம்) சாம்பியன் பட்டம் பெற்றது.

14வயது சிறுமியர், 16 வயது சிறுமியர், 18 வயது சிறுமியர் ஆகிய 3 பிரிவுகளிலும் ஜே.என்.பி.டி.(மும்பை) அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. சீனியர் பெண்கள் பிரிவில் சென்னை துறைமுக அணி பட்டம் வென்றது.

போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மத்திய தொழில்நிறுவன பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்.) தென்மண்டல் டி.ஐ.ஜி. ஜெயந்த் முரளி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு சென்னை துறைமுக தலைவர் அதுல்யா மிஸ்ரா தலைமை தாங்கினார்.

சென்னை துறைமுக துணை தலைவர் பரிடா, தேசிய அத்லடிக் சம்மேளன தொழில்நுட்பக்குழு தலைவர் சி.கே.வல்சன் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவின் துவக்கத்தில் சென்னை துறைமுக விளையாட்டு குழு செயலாளர் துரைராஜ் வரவேற்றார். முடிவில் விளையாட்டு குழு தலைவர் வீரராகவலு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்