முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகராட்சிகளின் கட்டமைப்புக்காக மானியம் உயர்வு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு அளிக்கும் 75 சதவிகித மானியத் தொகை எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்படும் தமிழக அரசின் மானியத் தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில் வளர்ச்சி காரணமாக நகர்ப்புறத்தை நோக்கி வரும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதன் விளைவாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சீராக்கும் வகையிலும், சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே செயல்படுத்த அவற்றிடம் போதிய நிதிவசதி இல்லாத காரணத்தினால், நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து மானியமாக 75 விழுக்காடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 25 விழுக்காடு தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக் கொள்ளும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது 2003​ஆம் ஆண்டில் அதிகபட்ச மானியத் தொகையாக, ஒரு மாநகராட்சிக்கு 50 லட்சமும், நகராட்சிக்கு 25 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இம்மானியத் தொகை உயர்த்தப்படவில்லை.

தற்போதுள்ள நகரங்களின் அதிகரித்த வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, ஆகிய காரணங்களினால் சாலை சந்திப்புகளில் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க, சாலைகளின் சந்திப்புகளில் வேகம் மற்றும் அறிவிப்புப் பலகைகள் மற்றும் விளக்கு வசதிகள் அமைப்பதும், புதிய சாலைகள் அமைப்பதும், தற்பொழுதுள்ள சாலைகளை விரிவுபடுத்துவதும், பாலங்கள், மேம்பாலங்கள் அமைப்பதும் அவசியமாகிறது.  கட்டுமானப் பொருட்களின் விலையை கருத்தில் கொண்டும், கடந்த எட்டு ஆண்டுகளாக மானியத் தொகையின் உச்சவரம்பு உயர்த்தப்படாமையை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு நகராட்சிக்கும் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்படும் 75 விழுக்காடு அதிகபட்ச மானியத் தொகையை மாநகராட்சிகளுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாகவும், நகராட்சிகளுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில், தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து, நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் மக்கள் சென்றடைய வழிவகை ஏற்படும்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago