முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் குடியரசு தின விழா: கலெக்டர் கொடியேற்றினார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.27 - மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் தேசிய கொடியை ஏற்றிவைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மதுரை மாவட்ட ஆட்சி;த்தலைவர் உ.சகாயம் தேசிய கொடியினை ஏற்றிவைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையின்போது மாவட்ட காவல்துறை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் திருநாவுக்கரசு உடன் இருந்தார். இந்த அணிவகுப்பில் காவல்துறை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர்ப்படை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல்துறையில் சிறப்பான சேவை புரிந்தமைக்கான இந்த ஆண்டுக்கான  தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்களை மதுரை மாவட்டம் மற்றும் மதுரை மாநகரை சேர்ந்த 85 காவலர்களுக்கு  வழங்கினார். அதனை தொடர்ந்து இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 134 தியாகிகள் மற்றும் தியாகிகள் குடும்பத்தினருக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுப்பொருட்களையும்; வழங்கி கெளரவித்தார்.  சுதந்திரப் போராட்ட தியாகிகள் 40 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர்  வழங்கினார்.  முன்னதாக சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் மலர் தூவி மரியாதை செய்து வரவேற்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை தலைவர் ராஜேஷ்தாஸ், மதுரை காவல் துறை துணைத்தலைவர் பாலநாகதேவி மதுரை காவல்துறை ஆணையர்  கண்ணப்பன் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேஷ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலிஅக்பர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெய்சிங்ஞானதுரை, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) ஆர்.ராஜாராம்,  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், மதுரை தெற்கு வட்டாட்சியர் ஞானகுணாளன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்பட மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்