முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வி செல்ல முடியாதவர்களுக்கு உதவ வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.27 - எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக வி.ஐ.டி. நாட்டிலேயே முதன்முறையாக ஒரு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு அங்கமாக உயர்கல்வி செல்ல முடியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்கு முன்னாள் மாணவர்கள் உதவவேண்டும் என ஜி.விசுவநாதன் பேசினார். வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் இதன் 17வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏறக்குறைய 2,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவுக்கு தலைமை தாங்கிய வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன்,  சிறந்த சமூக பணிக்கான விருதை பாலாஜி நந்தகுமாருக்கும்(அரியூர் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர்), கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சாதனை படைத்ததற்காக பி.ரோஸ் கவிதாவுக்கும், தொழில்முனைவோர்களை உருவாக்கும் பணியில் சாதனை படைத்ததற்காக ஜெரோம் ஜோசப் ராஜிக்கும், நிறுவனங்களை கையாளுவதில் சாதனை படைத்ததற்காக எம்.பி.சிட்டிபாபுவுக்கும் விருதுகளை வழங்கி  தலைமையுரையாற்றியபோது கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. உலக நாடுகள் பலவற்றை காணும்போது, நமது நாடு கல்வி வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது. 600 பல்கலைக்கழகங்களும், 13,000 கல்லூரிகளும் மட்டுமே உள்ளன. இதில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே உள்ளது. நம் நாட்டின் ஜனத் தொகைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் ஏற்பட வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அமர்த்துகின்றனர். அதனை பெறுவதற்கு நமது மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்கவேண்டும். இதற்கு உயர்கல்வி படித்தவர்கள் வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு கல்லூரிக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வி.ஐ.டி. மாணவர்கள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் புதிய பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்டு அனைத்தும் உலக மயமாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ளவர்கள் அயல் நாடுகளுக்கும், அயல் நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கும் உயர்கல்வி கற்க வசதி ஏற்பட்டுள்ளது.

சீர்திருத்தம் என்ற பெயரில் கல்விக்கு கட்டுப்பாடு கூடாது என என் தலைமையிலான இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அரசுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரு சில பல்கலைக்கழகங்கள் தான் அப்படி செயல்படுகின்றன.

எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர்கல்வி என்ற ஒரு திட்டத்தினை நாட்டில் முதன்முதலாக வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. உயர்கல்வி செல்ல முடியாதவர்களை கண்டு அவர்களுக்கு தேவையான நிதி வசதி உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும். இதற்கு வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.விசுவதான் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை பன்னாரி அம்மன் குரூப் நிறுவனங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சங்க எதிர்கால பணிகளுக்கான திட்டங்களை துவங்கிவைத்து பேசியதாவது:

இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்,  பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் பணிகளை திறமையாக மேற்கொண்டு , புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

வி.ஐ.டி.யில் பயின்று உலக அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வி.ஐ.டி.யில் சந்தித்து வசதி இல்லாத மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுண்ஐயாக இருப்பது வரவேற்கத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்உத செல்பவர்கள் அந்தந்த பகுதிகளில் என்ன தொழில் தொடங்க முடியுமோ அதனை ஆராய்ந்து அன்த தொழிலில் ஈடுபடவேண்உடம். அதன் மூலம் தொழில் வளர்ச்சி பெருகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு அளிப்பவர்களாக நீங்கள் மாறுவீர்கள்.

இவ்வாறு எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பேசினார்.

மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகைகளை வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.சம்பத் வழங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் எம்.பி. இரா.செழியன், காக்னிசன்ட் நிறுவன பிரதிநிதி ராகுல்சிங், வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், விட்டா நிர்வாகிகள் டி.வெங்கடேஷ், ஜி.பாலாஜி, அஸ்லாம் ஷெரீப், எஸ்.அஜய், பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவின் துவக்கத்தில் விட்டா பொது செயலாளர் சுதா ராஜகோபாலன் வரவேற்றார். முடிவில் விட்டா பெங்களூரு கிளை தலைவர் சங்கர் கோகுலே நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago