முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண நிதி: நீதிபதிகளின் ஒரு நாள் ஊதியம் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 27 - தமிழக நீதிபதிகளின் ஒரு நாள் ஊதியத்தை தானே புயல் நிவாரண நிதிக்கு அளித்தனர். தமிழகத்தை புரட்டிப்போட்ட தானே புயலால் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் உருக்குலைந்து போயின. புதுச்சேரியையும் புரட்டிப்போட்டது. தமிழக அரசு உடனடியாக ரூ.800 கோடியை ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொண்டது. புயலின் சேதம் 5 ஆயிரம் கோடிக்கும் மேலிருக்கும் என்று பார்வையிட வந்த மத்திய குழுவிடம் தமிழக அரசு பரிந்துரைத்து நீதி கேட்டது. ஆனால் மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.500 கோடி மட்டும் ஒதுக்கியது. 

இதற்கிடையே தானே புயலுக்கு பொதுமக்கள் தாராளமாக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அனைத்துத்துறை அமைச்சர்கள், பொதுமக்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.  

இதற்கிடையே ​தானே புயல் நிவாரணத்திற்காக தமிழகத்தில் பணியாற்றும் நீதிபதிகள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்கள். இந்த நிதியில் 70 சதவீதம் மாநில அளவிளான நிவாரணத்திற்கும், 30 சதவீதம் கடலூர், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி நிவாரணத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago