முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அறிவியல் விழா 30-ந்தேதி வரை நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.27 - தமிழக அரசின் உயர் கல்வித் துறையை சார்ந்த அறிவியல் நகரம் சென்னை அறிவியல் விழா என்ற மாபெரும் அறிவியல் நிகழ்வினை சனவரி 27 முதல் 30 ஆம் தேதி வரை அண்ணா ஜெம் அறிவியல் nullங்கா பள்ளியில் நடத்த உள்ளது.   இந்நிகழ்வினை உயர் கல்வித் துறை அமைச்சர் ஞ.பழனியப்பன் துவக்கி வைத்து பெண் விஞ்ஞானிகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது,  இளம் பெண் விஞ்ஞானி விருது மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விருதுகளை வழங்க உள்ளார்.  இவ் அறிவியல் விழாவின் நோக்கம் மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அறிவியலில் ஊக்கம் விளைவிப்பதாகும்.  இவ்விழாவில் 120 அரங்குகளில் அறிவியல் கண்காட்சிப் பொருட்கள் அமைக்கப்பட்டு அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற கருத்திற்கேற்ப நிகழ்த்தப்பட உள்ளது.  அது மட்டுமல்லாமல் பிரபல விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களால் பிரபல விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட உள்ளது.  இவ் அறிவியல் விழாவில் தலை சிறந்த அறிவியல் கூடங்களான சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், தமிழ் நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம், மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இந்திரா காந்தி அனல் மின் நிலையம், டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் போன்ற தலைச் சிறந்த நிறுவனங்கள் பங்கேற்று மக்களிடையே அறிவியலின் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.  இவ் அறிவியல் விழா 5 கருத்துக்களில் நடத்தப் பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்