முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு விழா: வீரச்செயல் விருதுகளை முதல்வர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன. 27 - சென்னையில் நேற்று குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் ரோசய்யா கொடியேற்றினார். வீரச் செயல் புரிந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

இந்திய நாட்டின் 63​வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதி கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்கள் விழாவை காண வசதியாக பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

நேற்று காலை 7.55 மணிக்கு முதல்​அமைச்சர் ஜெயலலிதா விழா மேடைக்கு வந்தார்.  அவரை சீருடை அணிந்த காவலர்கள் மோட்டார் சைக்கிள்கள் அணி வகுக்க அழைத்து வந்தனர். முதல் ​ அமைச்சரை தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி ங்கொத்து கொடுத்து வரவேற்றார். 7.57 மணிக்கு கவர்னர் ரோசய்யா போலீஸ் படை சூழ விழா மேடைக்கு வந்தார்.  அவருக்கு முதல்​அமைச்சர் ஜெயலலிதா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின்னர் அவருக்கு தலைமை செயலாளர், முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது விமானப் படை ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமடித்து மலர் தூவியது. அதை தொடர்ந்து முப்படைகள் மற்றும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். முப்படையை சேர்ந்த ராணுவ மற்றும் தொழில் பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை மொத்தம் 44 படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசைய்யா ஏற்றுக்கொண்டார். 

           பின்னர் வீரதீர செயல் புரிந்த 5 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா அண்ணா பதக்க விருதை வழங்கினார். சமீபத்தில் எழிலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின்போது, சிறப்பாக செயல்பட்ட என்.பிரியா, ஆர்.முருகன், தீவிபத்தில் மரணம் அடைந்த அன்பழகன் சார்பில் அவரது மகள், திருப்பூரை சேர்ந்த அரிகுமார், ரவி ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். மதநல்லிணக்கத்திற்கான கோட்டை அமிர் விருதை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது என்பவர் பெற்றுக் கொண்டார். காந்தி விருதை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் துறை அதிகாரி கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் டி.எஸ்.பி. செந்தில்குமார், தர்மபுரி மாவட்ட போலீஸ் அதிகாரி சம்பத் குமார், தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியம் தலைமை காவலர் சின்னமாதவன் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

இதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியாரின் செந்தமிழ் நாடு எனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாடலுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடினர். அதன்பின்னர், ஆந்திரா, கர்னாடக மாநில கலை, கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகள் சார்பிலும் அலங்கார வாகனங்கள் பங்கேற்றன. முப்படைகள் சார்பிலும் அலங்கார வாகனங்கள் இடம் பெற்றன. சிறந்த அலங்கார ஊர்தி மற்றும் சிறந்த நடன குழுவுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.இதில் முதலாவதாக செய்தி துறை, காவல் துறை,  சுற்றுலாத்துறை தொடர்ந்து, அனைத்து துறைகளில் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள திட்டங்களை விளக்கும் அம்சங்களுடன் ஊர்திகள் அணிவகுத்து வந்தன. இதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிறந்த அலங்கார ஊர்தி மற்றும் சிறந்த நடன குழுவுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள், nullநீதிபதிகள், வெளிநாட்டு தூதரக பிரதிநிதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். விழாவையொட்டி மெரினா கடற்கரை வழியாக செல்லும் வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மெரினா கடற்கரையில் கடலோர படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன. 

விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வளர்மதி, செல்லூர் ராஜீ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், கோகுலஇந்திரா, இராஜேந்திர பாலாஜி, கே.வி.ராமலிங்கம், செந்தில்பாலாஜி, முகமது ஜான், டி.கே.எம்.சின்னய்யா, எடப்பாடி பழனிசாமி, கே.ஜெயபால், சி.த.செல்லபாண்டியன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அரசு உயர் அதிகாரிகளும், போலீஸ் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!