முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 புதிய பாலங்கள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (27.1.2012) தலைமைச் செயலகத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்டலூர் மேம்பாலத்தையும், தமிழகம் முழுவதும் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் இரயில் நிலையம் அருகில் வண்டலூர் ​ வாலாஜாபாத் சாலையில் உள்ள இரயில்வே கடவுக்கு மாற்றாக 27 கோடி ரூபாய் செலவில் 1480 மீட்டர்ளம் கொண்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.  இதற்காக தமிழக அரசு 22 கோடி ரூபாயும், இரயில்வே துறை 5 கோடி ரூபாயும் செலவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம்  திறந்து வைத்தார். இம்மேம்பாலத்தால் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் செல்லும் பொது மக்கள் பெரிதும் பயனடைவர். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை மேம்பாடு முக்கிய பங்கு வகிப்பதாலும்,  பொது மக்கள் மற்றும் பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தங்குத் தடையின்றி விரைவாக குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய சாலைகள் இன்றியமையாதவை என்பதால்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாலை மேம்பாட்டில் பல முன்னோடி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி கலைக் கல்லூரி சாலையில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்; திருவாரூர் மாவட்டம், திட்டை தாராசுரம் சாலையில் சுள்ளான் ஆற்றில் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சேலம் ​ திருப்பத்தூர் ​ வாணியம்பாடி சாலையில் அனுமன்தீர்த்தத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; திருவண்ணாமலை  மாவட்டம், காழியூர் அருகில் செய்யாற்றின் குறுக்கே 10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்; திண்டுக்கல் மாவட்டம், கண்ணாப்பட்டி, செக்காபட்டி அருகில் வைகை ஆற்றின் குறுக்கே 5 கோடியே 51   லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்;  திருப்ர மாவட்டத்தில், ஆத்துக்கால்புதூர் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; சாம்பல்மேடு அருகில் திருமூர்த்தி அணையின் கழிவாற்றின் குறுக்கே 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரியபட்டி சடையம்பாளையம் சாலையில் அப்பிலியபட்டி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கோயம்புத்தூர் மாவட்டத்தில், செந்தேவி பாளையம் அருகில் கரிசல்காட்டு பள்ளம் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பில் பாலம்; மாதம்பட்டி அருகில் குனியமுத்தூர் வாய்க்கால் குறுக்கே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; தொண்டாமுத்தூர் அருகில் சித்திரைச்சாவடி வாய்க்கால் குறுக்கே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிகோட்டை ​ அஞ்செட்டி ​ நாட்றாம்பாளையம் சாலையில் ஓடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; மதுரை மாவட்டத்தில், வீரபாண்டி அருகில் பொதுப்பணித்துறை அணையிலிருந்து வரும் உபரிர் வாய்க்கால் குறுக்கே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரம்பலூர் மாவட்டத்தில்,  துங்கபுரம் அருகில் வீரமுத்திரவாரி  ஆற்றின் குறுக்கே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கொளத்தூர் அருகில் காட்டாற்றின் குறுக்கே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம், என மொத்தம் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், சாலை தன்மை தகவல் சேகரிக்கும் உபகரணம்  தமிழக அரசால் நெடுஞ்சாலைத் துறைக்கு வாங்கப்பட்டுள்ளது.  இந்த உபகரணமானது சாலையின்ளம் மற்றும் அகலம் ஆகியவற்றை அளக்கும் கருவி, சாலை வலைதளத்தை புவி அமைப்புடன்  இணைப்பதற்கான கருவி, ஓடுதளத்திலுள்ள மேடு பள்ளங்கள் மற்றும் தேய்மானங்கள் மற்றும் சமதளத்தில் உள்ள வேறுபாடுகள், சாலையின் வெடிப்புத்தன்மை ஆகியவற்றை துரிதமாக சேகரிக்க ஒளிமியுடன்  கூடிய கருவி, சாலை எல்லைக்குள் அறிவிப்பு பலகைகள், மரங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் போன்றவற்றை, மூன்று தொடர் ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டு பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். இந்த உபகரணத்தின் மூலமாக சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் ஒருசேர சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படுகிறது.  இந்த உபகரணம் சீருந்தில் பொருத்தப்பட்டு சாலைகளில் பயணிக்கும் போதே அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது. சேகரித்த தகவல்களின் அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை முன்னுரிமைப்படுத்தி, மதிப்பீடு தயாரித்து அவற்றை மேம்பாடு செய்ய இந்த உபகரணம் பேருதவியாக இருக்கும்.   இதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 20,000 கி.மீ. தூர சாலைகளின் தன்மை பற்றிய தகவல்களை சேகரித்து, விஞ்ஞான ர்வமாக துரிதமாக சாலைகளை வடிவமைத்து உடனுக்குடன் மேம்படுத்திட, இந்த உபகரணம் உதவுகிறது.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறைக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் பொருத்திய இரண்டு வாகனங்களை வழங்கினார். இந்த உபகரணங்களைக் கொண்டு முதற்கட்டமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் சேதமடைந்த சாலைகளை விரைந்து ஆய்வு செய்து, துரிதமாக செப்பனிட உத்தரவிட்டார்கள்.  இந்நிகழ்சியின் போது மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்,   பொதுப்பணித் துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச்  செயலாளர், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago