முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரி கூட்டு குடிநீர்: சாமி எம்.எல்.ஏ. முதல்வருக்கு நன்றி

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

மேலூர், ஜன. 28 - மேலூர் தொகுதி மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தினைஅறிவித்த தமிழக முதல்வருக்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சாமி எம்.எல்.ஏ பெருமிதத்தோடு கூறினார். மதுரை மாவட்டம் மேலூரில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கானபூமி பூஜை நடந்தது. அப்போது எம்.எல்.ஏ. சாமி பேசியதாவது,  மேலூர் பகுதியில் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் போக்க காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. இப்பகுதியில் தண்ணீருக்காக மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். குறிப்பாக, மேலூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. ஏற்கனவே 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேலூர் நகராட்சி பகுதிகளில் தண்ணீர் சப்ளை வழங்கப்பட்டது. பின்னர் மேலூர் தொகுதிக்கு நிரந்தரமாக தண்ணீர் விட கோரிக்கை விடுத்தேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா அன்றைய காலகட்டத்தில் உடனே அரசு அதிகாரிகளிடம் திட்டம் தயாரிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் அந்த திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன் பின்னர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்படியிருந்தும் பலனில்லை. தற்போது முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ. 784 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு 11.8.2010 ல் அரசு ஆணைப்படி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 29.12.2011 அன்று பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந்த திட்டப் பணிகள் 24 மாதங்களுக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் 12 லட்சத்து 14 ஆயிரத்து 583 பேர் பயனடைவர். மேலூர் நகராட்சியை பொறுத்தவரை 39 ஆயிரத்து 120 பேர். மேலூர் ஒன்றியத்தில் 226 குடியிருப்புகள் பயனடைவர். மக்கள் தொகை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 176. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பயன்பெறும் மக்கள் தொகை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 124. ஆ. வள்ளாளபட்டியில் பயன்பெறும் மக்கள் தொகை 7 ஆயிரத்து 585 என்றும் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் கோதண்டராமன், நிர்வாக பொறியாளர் முத்தையா, முன்னாள் தலைமை பொறியாளர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஜபார், மேலூர் நகராட்சி சேர்மன் சரவணன், மேலூர் ஒன்றிய சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய சேர்மன் வெற்றி செழியன், ஏ. வள்ளாளபட்டி பேரூராட்சி சேர்மன் உமாபதி, மேலூர் ஒன்றிய துணை சேர்மன் கோட்டைமுருகன், மாவட்ட கவுன்சிலர் அம்பலம், தாசில்தார் மோகனா, ஒப்பந்தகாரர் ஆண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago