முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா 7ம் தேதி நடக்கிறது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை.ஜன.- 30 - மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பத்திருவிழா வருகிற 7 ம் தேதி நடக்கிறது.    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் சுவாமி, ப்ரியாவிடையுன் வெள்ளி சிம்மாசனத்திலும், மீனாட்சி வெள்ளி அவுரா தொட்டில் வாகனத்திலும் எழுந்தருளி மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு புறப்படுகிறார்கள். அன்று காலை தெப்பக்குளம் அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளும் மீனாட்சி- சொக்கநாதர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வலம் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியையும், அம்பாளையும் தரிசிப்பார்கள்.   இதே போல் இரவும் தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தெப்பத்திருவிழாவையொட்டி தெப்பக்குளம் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்