முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த தேர்தல் கமிஷன்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, பிப்.- 2 - உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் உமாபாரதி நடத்தவிருந்த ரத யாத்திரைக்கு தேர்தல் கமிஷன் அனுமதி மறுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வருகிற 8 ம் தேதி தொடங்கி மார்ச் 3 ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜ்வாடி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமம் கிராமமாக ரத யாத்திரை செல்ல பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான உமா பாரதி திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த ரத யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவிக்கையில், ரத யாத்திரை நடத்த பாரதிய ஜனதா கட்சியினர் உறுதிச் சான்றிதழோ அல்லது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெறப்படும் சான்றிதழோ சமர்ப்பிக்கவில்லை. இதில் ஏதாவது ஒரு அனுமதி இருந்தால்தான் ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்