முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் பதவி விலக முரளி மனோகர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிப். - 3 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மூளையாக செயல்பட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,  2ஜி அலைக்கற்றை ஊழலில் பிரதமர் அலுவலகத்திற்கு எதிராக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அந்த உத்தரவில் அரசுக்கு நீதிமன்றம் தெரிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் மிக முக்கியமானவை. முன்னர் சுப்பிரமணிய சுவாமி அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார். ஆனாலும் தனி நபர் வழக்கு தொடர அனுமதி  தரமுடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. நாட்டையே உலுக்கி வரும் அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றி விசாரிக்கப்படவேண்டும். எனவே முன்னாள் அமைச்சர் ராசாவைப் போல உள்துறை அமைச்சர் சிதம்பரமும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
 காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால்தான் ராணுவம், அறிவியல் தொழில் நுட்பம், அடையாளக்குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மாற்றுக்கருத்து ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் இடையேயும் குழப்பம் நிலவுகிறது. அலைக்கற்றை ஊழலில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமானால் மத்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார் முரளி மனோகர் ஜோஷி.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்