முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம்: பெகுராவுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. நீதிமன்றம் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மார்ச்.- 20 - கேரளாவில் இடது கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 54 பேருக்கும் புதிய முகங்கள் 30 பேருக்கும் தேர்தல் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் 13 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில் இடது கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணி ஓரணியாகவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய  ஜனநாயக முன்னணி மற்றொரு அணியாகவும் களத்தில் குதித்துள்ளன.

இடது சாரி கூட்டணியில் வலது கம்யூனிஸ்டு கட்சி ஏற்கனவே தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இப்போது இடது கம்யூனிஸ்டு கட்சியும் தனது வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 54 பேரும், புதிய முகங்கள் 30 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் 8 மந்திரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

மொத்தம் 91 தொகுதி களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 10 பெண்களும் இடம் பிடித்துள்ளனர்.

தொகுதி பங்கீட்டின்படி  இன்னும் 2 தொகுதிகளுக் கான வேட்பாளர்களின் பெயர் கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

முதல்வர் அச்சுதானந்தனுக்கு இந்த  தேர்தலில் போட்டியிட அனுமதி கிடையாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பிறகு அவரது பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

87 வயதான அச்சுதானந்தனுக்கு உடல் நிலையை காரணம் காட்டி  தேர்தலில் டிக்கெட் கொடுக்க கட்சி மேலிடம் தயக்கம் காட்டியது. ஆனால் அது பின்னர் வாபஸ் பெறப்பட்டு இப்போது அவருக்கும் தேர்தல் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்