முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: மும்பையில் இறுதிப் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச். - 20 - மும்பையில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாகவும் இதற்காக அவர்கள் 17 டிக்கெட்டுகள் வாங்கியிருப்பதாகவும் தகவ்ல்கள் வெளியாகி உள்ளன.  உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பை வான்சுடே மைதானத்தில் ஏப்ரல் 2 ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் போது நாச வேலையில் ஈடுபட 2 பாகிஸ்தானிய தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இந்த தாக்குதலுக்காக ரசிகர்கள் போல மைதானத்திற்குள் நுழைய தீவிரவாதிகள் 17 டிக்கெட்டுகள் வாங்கியிருக்கும் அதிர்ச்சி செய்தியும் வெளிவந்துள்ளது. 

பாகிஸ்தானில் செயல்படும் லஸ்கர் இ தொய்பா மற்றும் சமாத் - இ அக்லே சுன்னத் ஆகிய இரு தீவிரவாத இயக்கங்கள் ஒருங்கிணைந்து இந்த சதியில் ஈடுபட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவில் அடிக்கடி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது தெரிந்ததே. 

இந்நிலையில் சமாத் - இ சுன்னத் என்ற இயக்கமும் கைகோர்த்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் இந்த இயக்கம் குண்டு வெடிப்புகளை நடத்தியிருக்கிறது. தற்போது லஸ்கர் இ தொய்பாவுடன் சமாத் இ சுன்னத்தும் சேர்ந்து கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. ஏப்ரல் 2 ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்திற்கு ரசிகர்கள் போல் நுழைந்து ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனால் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் மும்பை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று அளித்த பேட்டியில் இந்தியா, வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று பகல் இரவு ஆட்டமாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முன்னிட்டு ஸ்டேடியத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் மைதானத்திற்கு மேல் பறக்கும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும். கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட 3 வாகனங்கள் மைதானத்தை சுற்றி ரோந்து வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்