முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் பாதுகாப்புக்கு இனி ரயில்வே பாதுகாப்பு படையே பொறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.- 13 - ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு பணியில் ரயில்வே போலீசுக்கு பதிலாக இனி ரயில்வே பாதுகாப்பு படையே ஈடுபடுத்தப்படும். இதற்கான புதி மசோதா வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு பணியில் தற்போது மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் அரசு ரயில்வே போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளை ரயில்வே போலீஸ் கண்காணித்து வருகிறது. இதேபோல ரயில்வே சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இனி ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு பணிகளை ரயில்வே பாதுகாப்பு படையே கவனிக்கும். இதற்காக புதிய சட்ட மசோதா ஒன்றை மத்திய ரயில்வே துறை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. மத்திய சட்டம், நிதி, உள்துறை அமைச்சகங்கள் உள்பட பல்வேறு அமைச்சகங்களின் ஆலோசனைக்கு பிறகு மத்திய ரயில்வே துறை இதற்கான புதிய சட்ட முன்வடிவை தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை (திருத்தம்) 2012 என்ற இந்த புதிய சட்டத்தின்படி தற்போது அரசு ரயில்வே போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் குற்ற நடவடிக்கைகளை இனி ரயில்வே பாதுகாப்பு படையே கவனிக்கும். இந்த சட்டத்தின்மூலம் அரசு ரயில்வே போலீஸ் படை வாபஸ் பெறப்பட உள்ளது. உதாரணமாக டெல்லி செல்லும் ஒரு ரயிலில் பீகார் மாநிலத்தில் ஒரு திருட்டு நடைபெறுமேயானால் அந்த திருட்டு குறித்து டெல்லியில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தேவையில்லை. மாறாக திருட்டு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஒரு ரயிலில் ஒரு திருட்டு நடைபெற்றால் அதுகுறித்து டெல்லியில் உள்ள அல்லது சென்னையில் உள்ள ரயில்வே போலீசில்தான் புகார் கொடுக்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு அலைச்சல் ஏற்படுவது மட்டுமல்லாமல் ரயில்வே போலீசாருக்கும் அலைச்சல் ஏற்படுகிறது. ஆனால் புதிய சட்டத்தின்படி ஒரு ரயிலில் ஒரு திருட்டு நடைபெற்றால் அந்த திருட்டு எங்கு நடைபெற்றதோ அங்குள்ள ரயில்வே பாதுகாப்பு படையினரிடமே புகார் கொடுத்து அதுகுறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்துகொள்ள முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago