முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளிடம் அரசியல் பாடம் கற்றேன்- ராகுல் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

சோரான், பிப்.- 13 - அமேதி தொகுதி விவசாயிகளிடம் இருந்துதான் அரசியல் பாடம் கற்றுக்கொண்டேன் என்று காங்.பொதுச்செயலாளர்  ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு சென்று ஏழை விவசாயிகளின் வீடுகளில் தங்கி, அவர்களுடன் உணவருந்தி கலந்துரையாடினார்.  முன்னதாக அலகாபாத் அருகே உள்ள சோரானில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் மாயாவதி அரசை கடுமையாக தாக்கிபேசினார். உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்டோரும் மிக மோசமான நிலையில் இருப்பதற்கு இப்போதைய மாயாவதி அரசும். பாரதீயஜனதா அரசும் காரணம் என்று குற்றம் சாட்டினார்.  இங்கு 70 மாவட்டங்கள் உள்ளன.  இதில் எத்தனை முஸ்லிம்கள் நீதிபதிகளாக உள்ளனர். எத்தனை தாழ்த்தப்பட்டோர் காவல்துறை கண்காணிப்பாளர்களாக உள்ளனர் என்று கேள்வி விடுத்தார்.  நான் கல்லூரியில் படித்ததை விட அமேதி தொகுதி விவசாயிகளிடம் இருந்துதான் அரசியல் பாடம்கற்றுக்கொண்டேன் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்