முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குர்ஷித் விவகாரத்தில் பிரதீபா தலையிடக்கோரி தேர்தல்ஆணையம் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்ரவரி.- 13 - சல்மான் குர்ஷித் விவகாரத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை தலையிடக்கோரி தேர்தல் ஆணையம் புகார் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி முஸ்லீம்களுக்கு உள்ஒதுக்கீடு குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விவகாரம் தொடர்பாக உடனடியாக தீர்மானமான தலையீட்டினை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சனிக்கிழமை இரவு புகார் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சராக இருக்கும் ஒருவர் தேர்தல் ஆணையத்தை பலப்படுத்துவதற்கு மாறாக அவரே பலவீனப்படுத்தும் விதத்தில் பேசி வருவதும், அரசியல் சாசன சட்டத்தின்படி அவரது கடமையை களங்கப்படுத்தும் விதமாக அவர் நடந்துகொள்வதும் தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சியடைய வைக்கிறது என்று தேர்தல் ஆணையம்ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஒரு மத்திய அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருப்பது முன்பு எப்போதும் இல்லாத ஒன்றாகும். தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லீம்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. அப்படியிருந்தும் தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் நான் உள்ஒதுக்கீடு பற்றிப் பேசியே தீருவேன் என சல்மான் குர்ஷித் பேசியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு இப்போது புகார் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் பிரதமர் அலுவலகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக ஆணையத்தின் புகார் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய சட்ட அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்தவேண்டும் என்று பா.ஜ.க துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்