முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதசே மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட காங்கிரசுக்கு வாக்களியுங்கள்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

ரேபரேலி,பிப்.- 14 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏதுவாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு அம்மாநில வாக்காளர்களை பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. 3-வது கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று முடிந்துவிட்டது. கடைசி கட்ட தேர்தல் வரும் மார்ச் 3-ம் தேதி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே அம்மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் சோனியாவின் மகள் பிரிய்கா பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், மாயாவதி அரசை கடுமையாக தாக்கி பேசினார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த அரசு தடையாக உள்ளது என்றும் அவர் சாடினார். மேலும் அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் வாக்காளர்கள் தமது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சோனியாவும் ராகுல் காந்தியும் உங்களுக்கு நிறைய செய்ய விரும்பினார்கள். ஆனால் மாயாவதி அரசுதான் இடையூறுகளை ஏற்படுத்திவிட்டது. மற்ற மாநிலங்களில் எல்லாம் மத்திய திட்டங்கள் நன்றாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் உ.பி.யில் இந்த திட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்றும் பிரிய்கா குற்றஞ்சாட்டினார். மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இருந்தால்தான் ஒரு மாநிலம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்றும் பிரியங்கா கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் ஊழல்களும் குற்றங்களும் பெருகிவிட்டன. உத்திரப்பிரதேசம் மற்ற மாநிலங்களை விட பின்தங்கி உள்ளது என்ற பிரியங்கா, மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தங்கள் நலனையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நினைத்து ஓட்டுப்போடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் தேவை. வேலைவாய்ப்பு தேவை. அவர்களின் எதிர்காலத்திற்காக காங்கிரஸ் மட்டுமே செயலாற்ற முடியும் என்றும் பிரியங்கா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்