முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். வேட்பாளர்களுக்காக சிரஞ்சீவி தேர்தல் பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச் - 21 - பிரபல சினிமா நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சியை நடத்தியவருமான சிரஞ்சீவி தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார். பிரபல நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு, தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை துவக்கி நடத்திவந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவரது கட்சி மக்களிடம் செல்வாக்கை பெறவில்லை. இதனால் இவர் தனது கட்சியான பிரஜாராஜ்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவெடுத்தார். இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 6 ம் தேதி இவரது கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. 

இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 13 ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரச்சாரம் செய்தால் அது கட்சிக்கு பெரும் பலனைக் கொடுக்கும் என்று  காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் சிரஞ்சீவியை பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்சி மேலிட உத்தரவை ஏற்று இவர் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  இவர்  பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago