முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா உயிரை காப்பாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்:

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 21 - ராசா உயிரை காப்பாற்றக்கோரி உள்துறை அமைச்சருக்கும், சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யவும்  தலித் அமைப்பு நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஏர்போர்ட் த.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக வரலாற்றில் காமராசரால் அடையாளப்படுத்தப்பட்டவர் கக்கன்ஜி ஆவார். கக்கன்ஜி தமிழக அரசியல் வரலாற்றில் தூய்மைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக விளங்கியவர். அறிஞர் அண்ணாவால் அடையாளப்படுத்தப்பட்ட சத்தியவாணி முத்து சிறந்த முறையில் தமிழகம் போற்றும் வகையில் பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தவராவார். இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலித் சமூகத்தில் பிறந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை கருணாநிதி தன்னுடைய குடும்ப நலத்திற்காக பகடைக் காயாகப் பயன்படுத்தி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கவைத்து திகார் சிறையில் அடைத்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் மனைவியும் மகளும் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் ராசாவின் நெருங்கிய நண்பரான இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்துள்ளது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தி.மு.க.வின் கடந்த ஆட்சியில் ஸ்டாலின் நண்பரான அண்ணாநகர் ரமேஷ்க்கும், இன்றைய ஆட்சியில் சாதிக் பாட்சாவிற்கும் ஏற்பட்டுள்ள நிலை நாளை ராசாவுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை தலித் சமுதாயம் எச்சரிக்கை செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்படும்.

எனவே, மத்திய புலனாய்வுத் துறையும் (சி.பி.ஐ.) ராசாவின் உயிருக்கும் உடமைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க இக்கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்