முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடங்கியது ஐஎஸ்எல் கால்பந்து: முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா - இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் மும்பையை 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வீழ்த்தியது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்பிஜி நிறுவன துணைத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, அகில இந்திய கால்பந்து சம்மே ளன தலைவர் பிரபுல் படேல், கால் பந்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் தலைவர் நீடா அம்பானி ஆகியோர் இணைந்து ஐஎஸ்எல் தொடர் தொடங்குவதை முறைப்படி அறிவித்தனர்.
தொடக்க விழாவையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் லேசர் ஒளி விளக்கு அலங்காரங்களுடன் நடைபெற்றன. இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாடினார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ரண்பீர் கபூர், ஜான் ஆபிரஹாம், நடிகை பர்ணிதி சோப்ரா உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடைபெறும் இப்போட்டியில் சென்னையின் எப்சி, அட்லெடிகோ கொல்கத்தா, எப்சி கோவா, எப்சி புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், டெல்லி டைனமோஸ் எப்சி ஆகிய 8 அணிகள் பங்கேற் கின்றன. வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 61 ஆட்டங்கள் நடக்கின்றன.
முதல் போட்டியில் கொல்கத்தா மும்பை அணிகள் மோதின. விறுவிறுப்பாகச் சென்ற முதல் பாதி ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் அடித்து, முன்னிலை பெற்றது. கொல்கத்தா அணியின் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிக்ரு டெபர்ரா, சக வீரர் ஸ்பெயினைச் சேர்ந்த ஜோப்ரி மாட்யூ கடத்திக் கொடுத்த பந்தை, அற்புதமாக மும்பையின் கீப்பர் சுப்ரதா பாலை ஏமாற்றி கோலாக மாற்றினார்.
இதன்மூலம் ஐஎஸ்எல் தொடரின் முதல் கோலை அடித்த வீரர் என்ற பெருமையை பிக்ரு டெபர்ரா பெற்றார். இரண்டாவது பாதி ஆட்டத்தில், 68-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் மத்தியக் கள வீரர், ஸ்பெயினைச் சேர்ந்த போஜ்ரா பெர்னாண்டஸ் தனது அணிக்கான 2-வது கோலை அடித்தார். அதன் பின்னர், மும்பை அணி அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்த போதும், கொல்கத்தா அணியின் கோல்கீப்பர் சுபாஷிஷ் ராய் சவுத்ரி அவற்றை அற்புதமாகத் தடுத்தார்.
மூன்று நிமிடங்கள் அளிக் கப்பட்ட கூடுதல் நேரத்தில், ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த போது ஸ்பெயினைச் சேர்ந்த அர்னல் லிபர்ட் கோண்டே கார்போ கொல்கத்தா அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். இதன் மூலம் மும்பையை 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வீழ்த்தியது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன: சிபிஐ நீதிமன்றம்
புது டெல்லி, அக்.14-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் வெளிப்படையற்ற தன்மையில், நேர்மையற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று சிபிஐ நீதிமன்றம் சாடியுள்ளது.
நிறுவனங்களின் விண்ணப்பங்களை நுணுகி ஆராயாமல், சுரங்க ஒதுகீடுகளை ரகசியமான முறையில், ஏன் அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை விளக்காமல் செய்திருப்பது பப்ளிக் செர்வண்ட்களின் குற்றவியல் சார்ந்த மோசமான நடத்தையைக் குறிப்பதாகும். “இந்தச் செயல் நாட்டின் இயற்கை வளங்களை தனியார் நிறுவனங்கள் முறையற்ற வகையில் உடைமையாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்துள்ளது” என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் சாடியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரித் துறை செயலர் எச்.சி.குப்தா, அப்போது இணைச் செயலராக இருந்த கே.எஸ்.குரோபா மற்றும் இயக்குனர் கே.சி.சமாரியா ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அளித்திருந்தது. ஆனால் இவர்கள் மீதான விசாரணை அறிக்கையை சிபிஐ முடிவுக்குக் கொண்டு வந்ததை சிபிஐ கோர்ட் ஏற்க மறுத்து மேற்கூறிய முறையில் சாடியுள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேட்டில், நிலக்கரித் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சட்டவிரோதமான முறையில் செய்துள்ளனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சுரங்க ஒதுக்கீட்டிற்கான கடிதங்களை அளிப்பதற்கு முன்பாகவே நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஸ்க்ரீனிங் கமிட்டி ஒதுக்கீடுகளை நேர்மையற்ற முறையில் வழங்கியுள்ளது. அந்த நிறுவனங்களின் தகுதி அடிப்படை குறித்து அவர்களது விண்ணப்பங்களை கூர்ந்து ஆய்வு செய்யவில்லை. என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து