முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டியில் பங்கேற்றது சரியான முடிவு: சானியா

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றது எனது வாழ்நாளில் எடுத்த மிகச்சரியான முடிவுகளில் ஒன்று என இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா கூறியுள்ளார். தென்கொரியாவின் இன்சியோனில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தங்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி வெண்கலமும் வென்றது.

முன்னதாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தரவரிசை புள்ளிகளை அதிகரிப்பதற்காக ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்க சானியா முடிவு செய்திருந்தார். எனினும் கடைசி கட்டத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கி, இரு பதக்கங்களை வென்றார்.

இதற்கு முன்பு 2002, 2006, 2010-ம் ஆண்டுகளில் ஆசிய போட்டியில் பல்வேறு பிரிவுகளில் விளையாடி ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். தனது சொந்த ஊரான ஹைதராபாதில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சானியா கூறியது:

கடந்த சில ஆண்டுகளாக நான் காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால் கடந்த இரு மாதங்களில் சில வியத்தகு வெற்றிகளை பெற்றுள்ளேன். இப்போது ஆசிய போட்டியில் பங்கேற்று நாட்டுக்காக இரு பதக்கங்களை வென்றது மிகவும் மிகழ்ச்சி அளிக்கிறது. ஆசிய போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று எடுத்த முடிவு மிகச்சரியானது. தொடர்ந்து சிறப்பாக விளையாட தேவையான உத்வேகத்தை ஆசிய போட்டி எனக்கு அளித்துள்ளது.

சமீபகாலமாக எனக்கு எதிராக எழுந்த சர்ச்சையை இது முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நான் தாய் நாட்டுக்காக பதக்கம் வென்று நாட்டுக்கான எனது கடமையின் ஒரு பகுதியை நிறைவேற்றியுள்ளேன். என்னை விமர்சித்தவர்களுக்கு உரிய பதிலை அளித்துள்ளேன் என்று சானியா மிர்சா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்