முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் லலித் மோடி நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்ப்பூர், அக்.13 - ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
லலித் மோடியின் இடத்தில் பாஜக தலைவர் அமின் பதான் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்று நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் அமின் பதான் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் கீழ் உள்ள 33 மாவட்ட கிரிக்கெட் சங்கங்களில் 23 சங்கங்கள் லலித் மோடியை பதவியிறக்கம் செய்யும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிசிசிஐ-யினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள லலித் மோடி கடந்த மே மாதம் பெரும்பான்மை வாக்குகள் பெற்று ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வானார். லலித் மோடி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்குத் தடை விதித்தது. இதனால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் எந்த வித பிசிசிஐ தொடர்பான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை தோன்றியது.
இப்போது லலித் மோடி தூக்கி எறியப்பட்டதையடுத்து பிசிசிஐ-யின் தடை விலகும். மேலும் சவாய் மான்சிங் ஸ்டேடியத்திற்கு ஐபிஎல் போட்டிகளும் சர்வதேச போட்டிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமின் பதானுக்கு வசுந்தரா ரஜே சிந்தியாவின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது. பிசிசிஐ-யுடன் முரண்படாமல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் செயல்படுவதை அவர் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago