முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநில கிராமத்தை டெண்டுல்கர் தத்து எடுத்தார்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

நகரி, அக்.19 - மகாத்மா காந்தியின் கணவை நனவாக்கும் வகையில் ஒவ்வொரு எம்பியும் 3 கிராமத்தை தத்து எடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி ராஜ்யசபா எம்பியும் பிரபல கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புத்தம் ராஜூ கண்டிகை என்று ஒரு கிராமத்தை தத்து எடுத்தார். கண்டிக்கை என்று சுருக்கமாக அழைக்கப்படும் புத்தம் ராஜூ கண்டிகை கிராமம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வசிக்கும் 90 சதவீத மக்கள் பரம ஏழைகள். மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்கள்.

கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் நிலம் தரிசு பூமியாக உள்ளது. 9 ஏக்கரில் தான் விவசாயம் நடக்கிறது. தரிசு பூமியில் எளுமிச்சை தோட்டம் போட்டு உள்ளனர். இந்த கிராமத்தில் ஒருவர் கூட அரசு ஊழியர் இல்லை. ஒரே ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள இந்த பள்ளியில் 54 குழந்தைகள் படிக்கிறார்கள். மக்களின் பிரதான தொழில் ஆடு, மாடு மேய்ப்பது என்பதால் அதன் சானத்தால் கிராமம் சுகாதார சிர்கேடாக உள்ளது.

இத்தகைய ஒரு கிராமத்தை டெண்டுல்கர் தத்து எடுத்ததன் மூலம் அக்கிராமம் தற்போது பிரபலமாகி உள்ளது. அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கிராமத்தை நவீர நகரமாக்க டெண்டுல்கர் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.360 கோடியை ஒதுக்கி உள்ளார். அதோடு தனது சொந்த நிதியை செலவு செய்ய உள்ளார்.

முதல் கட்டமாக கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீர் இணைப்பு, கிராம சாலை, பாதாள சாக்கடை திட்டம், சான கழிவுகளை கொண்டு உரத்தொழிறசாலை, பள்ளிக் கூடம், ஆஸ்பத்திரி, எறிவாயு இணைப்பு, 24 மணி நேர மின்சார வசதி, மயானம் போன்ற வசதிகளை செய்ய திட்டமிட்டுள்ளார். மொத்தத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்க நகரமாக மாற்ற அவர் முடிவு செய்துள்ளார்.

மேலும் த்தது எடுத்த கிராமத்தை பார்க்க டெண்டுல்கர் நவம்பர் 16-ஆம் தேதி கண்டிகை வருகிறார். ஆனாலும் அவரது வருகை உறுதிப்படுத்தப்பட வில்லை என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கூறினார். டெண்டுல்கர் வருகையால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தாங்கள் ஓட்டு போட்ட எம்எல்ஏ கூட எங்கள் கிராமத்துக்கு வந்ததில்லை. டெண்டுல்கர் வருவது சந்தோஷமாக உள்ளது என்று கிராம மக்கள் கூறினார்கள். டெண்டுல்கர் வருவது தாங்கள் செய்த புண்ணியம். அவரது வருகை எங்களுக்கு கிடைத்த வரம் என்று பஞ்சாயத்து தலைவர் நாகேஸ்வரராவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்