முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி தரவரிசை பட்டியல்: கோஹ்லிக்கு 2-வது இடம்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர்: பார்ம்-அவுட் ஆகியிருந்த விராட் கோஹ்லி, மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டியதால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளார். இந்திய பவுலர்களும் இந்த பட்டியலில் முத்திரை பதித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக தொடரில் இருந்தே இந்திய நம்பிக்கை நட்சத்திரம் கோஹ்லி பார்ம்-அவுட் ஆகியிருந்தார். 'ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளால் ஆபத்து உள்ளது' என்று சிவகாமி கம்ப்யூட்டர் கணிக்கவில்லை, அவ்ளவுதான். மற்றபடி, அவர் தொடர்ந்து அதேபோன்ற பந்துகளில் அவுட் ஆகிவந்தார்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பழைய மாதிரியே அவுட் ஆகியிருந்தாலும் அதற்கடுத்த இரு போட்டிகளிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரை சதமும், இறுதி போட்டியில் சதமும் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள ஒன்டே பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோஹ்லி இரண்டாம் இடம் பிடித்து, அந்த இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். முதலிடத்தில் தெ.ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் உள்ளார்.

பவுலர்களை பொறுத்தளவில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 7வது இடம் பிடித்து தனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐந்தாவது இடத்தில் இருந்து, ஆறாவது ரேங்கிற்கு கீழிறங்கியுள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் 174 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, முதன்முறையாக முதல் 20 ரேங்குகளுக்குள் நுழைந்துள்ளார். அவருக்கு தற்போது 16வது இடம் கிடைத்துள்ளது.

அணிகளுக்கான ஐசிசி ரேங்க் பட்டியலில் இந்தியா, 113 புள்ளிகளுடன் 2வது இடத்தை தென் ஆப்பிரிக்க அணியுடன் பங்கிட்டுக்கொண்டுள்ளது. 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்