முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ்எல்: கோவாவுக்கு முதல் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பட்ரோடா, நவ.03 - இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணி 1-2 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. கோவா அணி தனது 5-வது ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த கோவா, இப்போது ஓர் இடம் ஏற்றம் கண்டுள்ளது.

கோவா மாநிலம் பட்ரோடாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே டெல்லி அணி கோலடித்தது. கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்து புருனோ கொடுத்த கிராஸில் ஜங்கர் இந்த கோலை அடித்தார். இதையடுத்து கோவா அணி தீவிரம் காட்ட, 14-வது நிமிடத்தில் அந்த அணியின் கிரிகோரி மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் கோவாவின் தீவிர முயற்சிக்கு பலன் கிடைத்தது. இடதுபுறத்தில் இருந்து வந்த பாஸை மிக அழகாக தலையால் நிறுத்தி கோல் கம்பத்தை நோக்கி முட்டினார் ரோமியோ. அதை சரியாகப் பயன்படுத்திய ஜீவெல் தலையால் முட்டி அசத்தலாக கோலடித்தார். இதனால் உற்சாகம் பெற்ற கோவா அணி 90-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. இந்த கோலை மிராஸ்லோவ் கொடுத்த பாஸில் டோல்கே ஆஸ்பெ அடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்