முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்ட இறுதி விசாரணை அறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.4 - ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை முகுல் முத்கல் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முக்தல் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அறிக்கையில் புதிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐ.பி.எல். அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் அடங்கிய மூவர் கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago