முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்துக்கு மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ 8 - ர ஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் ஆனந்துக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று வெள்ளிக் கிழமை முதல் தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் போட்டிகள் தொடங்கும். இதில் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயை சேர்ந்த நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸென் ஆகியோர் மோதுகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 22 வயதான கார்ல்ஸென், அனுபவ வீரரான ஆனந்தை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி ப ட்டம் வென்றார். அதன்பின் கேண்டிடேட் செஸ் தொடரில் முதலிடம் பிடித்தார் ஆனந்த். இதன் மூலம் 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த முறை கார்ல்ஸெனிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க ஆனந்துக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முறை ஆனந்துக்கு சொந்த மண் என்ற நெருக்கடி இல்லை. அதோடு கடந்த சில மாதங்களாக அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டிருப்பதும் ரஷ்யா அவருக்கு ராசியான இடம் என்பதும் சாதகமான அம்சங்கள். அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் என்ற நெருக்கடி கார்ல்ஸெனுக்கு பின்னடைவாக அமையலாம். 12 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் முதலில் 6.5 புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை பெறுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்