முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் மீது சிபிஐ விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ 14 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் முதலீடு செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 2ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ . 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீ து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதனையடுத்து முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் அ. ராசா, கனிமொழி எம்.பி, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாகித் பல்வா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புதுடெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சுப்பிரமணியன்சுவாமி கடந்த 3ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

2 ஜி அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் ஒன்று. அதன் உரிமையாளர் சாகித் பல்வா, கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட அலைக்கற்றை ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு ரூ. 1. 650 கோடி கட்டணத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டணம் 2001ம் ஆண்டுக்கு உரியதாகும். எனினும் அப்போதைய நிதியமைச்சர் ப . சிதம்பரமும், தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராசாவும் இடம் பெற்ற மத்திய அமைச்சரவை குழு முறைகேடாக கட்டணங்களை நிர்ணயித்து அனுமதி வழங்கியது. அதன் பின்னர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் நிறுவனத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்குகளை அபுதாபியில் உள்ள எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ . 3,500 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த எடிசலாட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளே உள்ளனர். இதன் காரணமாக நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளான ரா மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இது குறித்து நன்கு தெரிந்திருந்தும் ப. சிதம்பரம் மற்றும் ராசா ஆகியோர் எடிசலாட் நிறுவனம், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்க அனுமதி அளித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானுடனும், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர் என்று மத்திய நுண்ணறிவு பிரிவு அப்போதைய நிதி அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் இவ்வளவு தடைகளையும் மீறி ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி அளித்திருந்தார்.

இது குறித்து கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு கோப்பு ஒன்றில் அ. ராசா குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அலைக்கற்றை அனுமதி பெற்ற நிறுவனம் அதனை 3 ஆண்டுகள் வரை வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க இயலாது. எனவே சிதம்பரம் நான் இந்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர, ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் மீது அமலாக்கத்துறையின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தம் முறைகேடானது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன்சுவாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க கோருவது இது 2வது முறை. இதற்கு முன்பு 2006ம் ஆண்டு ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதி வழங்கியது தொடர்பாக விசாரித்து வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்வான், எடிசலாட் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago