முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கர் விமர்சனத்துக்கு கபில்தேவ் பதிலளிக்க மறுப்பு

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, நவ 14 - டெண்டுல்கர் பிளேயிங் இட் மை வே என்ற பெயரில் சுயசரிதையை சமீபத்தில் வெளியிட்டார். அதில் 1999-2000 ஆண்டில் ஆஸ்திரேலிய தொடரில் கபில்தேவ் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஏமாற்றம் அடைந்தேன். அவர் ஆட்டம் யுக்திகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கவே இல்லை என்று விமர்சித்து இருந்தார்.

டெண்டுல்கரின் இந்த விமர்சனம் குறித்து கபில்தேவ் பதிலளிக்க மறுத்து விட்டார். அவர் கூறும் போது, இது சச்சின் கருத்து. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. நான் அனைவரது கருத்தையும் மதிக்கிறேன் என்றார். இந்தியாவின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து கபில்தேவிடம் கேட்ட போது, இப்போது எந்த முடிவுக்கும் வர இயலாது. அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். வெற்றி, தோல்வி என்பது வேறு விஷயம். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் முடிவும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்