முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கரை விட கவாஸ்கர் சிறந்த பேட்ஸ்மேனாம்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, நவ 14 - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் முன்னாள் பிரபல சுழற்பந்து ஜாம்பவான்கள் பிரசன்னா, பி. சந்திரசேகர், பிஷன்சிங்பெடி ஆகியோர் பங்கேற்றனர். இந்த 3 பேரும் டெண்டுல்கரை விட கவாஸ்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரசன்னா கூறும் போது, கவாஸ்கர் எங்களுடன் வலை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவரது முகத்தில் ஒரு ஆவேசம் தெரியும். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சை ஹெல்மெட் அணியாமல் மிகவும் சாதாரணமாக விளையாடுபவர் என்றார்.

பிஷன்சிங் பெடி கூறுகையில், எங்களது உண்மையான லிட்டில் மாஸ்டர் தான் சிறந்தவர். அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆவார் என்றார். இதே போல் தாங்கள் பந்து வீசிய வகையில் வெஸ்ட்இண்டீசை சேர்ந்த கேரி சோபர்சே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று 3 பேரும் குறிப்பிட்டுள்ளனர். சந்திரசேகர் கூறும் போது, இங்கிலாந்தை சேர்ந்த பேரிங்டனை அவுட் செய்வது மிகவும் கடினமானது. ஆனாலும் சோபர்ஸ்தான் எப்போதுமே சிறந்த பேட்ஸ்மேன் என்றார். இதே போல இந்திய கேப்டன்களில் மன்சூர் அலிகான் பட்டோடி, கங்குலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர் என்று 3 பேரும் பாராட்டி உள்ளனர். சந்தேகம் அளிக்கும் வகையில் வீசும் சுழற்பந்து வீ ரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை காலதாமதானது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கையை ஐசிசி எடுத்து இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்