முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் அதிவேக டிவிலியர்ஸ் 7,000 ரன்கள்!

சனிக்கிழமை, 15 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெரத், நவ.16 - பெர்த்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடிக்கும் என்று தெரிகிறது. காரணம், இந்தியாவின் விராட் கோலி 137 இன்னிங்ஸ்களில் 6,069 ரன்களை எடுத்துள்ளார். இவர் டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்து விடுவார் என்று தெரிகிறது.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 96 இன்னிங்ஸ்களில் 4,798 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி 20 ஒருநாள் இன்னிங்ஸ்களில் டிவிலியர்ஸ் 1,124 ரன்களை விளாசியுள்ளார். இதில் 4 சதங்கள் 6 அரைசதங்கள்.
முன்னதாக கங்குலிக்கு அடுத்த இடத்தில் பிரையன் லாரா 183 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்திருந்தார். டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 187 இன்னிங்ஸ்களிலும், ஜாக் காலிஸ் 188 இன்னிங்ஸ்களிலும், சச்சின் டெண்டுல்கர் 189 இன்னிங்ஸ்களிலும், கெய்ல் 189 இன்னிங்ஸ்களிலும், கேப்டன் தோனி 189 இன்னிங்ஸ்களிலும் பாண்டிங் 192 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்களைக் கடந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago