முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, நவ 17 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 4 மணி நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருவிழா மற்றும் விசேஷ காலங்கள் தவிர வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். கடந்த 2 நாட்களாக திருமலையில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் நேற்று முன்தினம் மழை இல்லாத போதிலும் கடும் குளிர் காணப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை 37 ஆயிரத்து 324 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை நிலவரப்படி இலவச தரிசனத்தில் 3 அறைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. இவர்கள் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். சனி, ஞாயிற்று கிழமைகளில் திவ்ய தரிசனம் ரத்து செய்திருப்பதால் மலை பாதையில் வரும் பக்தர்களும், இலவச தரிசன வரிசையிலேயே அனுமதிக்கப்பட்டனர். ரூ. 300க்கான சிறப்பு தரிசனம் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் காலை 10 மணிக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இவர்களும் விரைவாக தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ப க்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் மூலம் ஏலம் விட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஏலம் செப்டம்பர் மாதம் நடந்தது. இந்த ஆண்டு ரூ. 200 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 63.98 கோடி மட்டுமே கிடைத்தது. தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைமுடிகள் அனைத்தையும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பேஷன் டெக்னாலஜி மற்றும் மருந்து நிறுவனங்கள் அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்