முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மன்மோகன்-சோனியா அடுத்தவாரம் பிரசாரம்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,ஏப்.2 - கேரளாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அடுத்தவாரம் பிரசாரம் செய்கிறார்கள்.  தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இந்த 3 மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அடுத்த வாரம் பிரசாரம் செய்கிறார்கள். வருகின்ற 6-ம் தேதி கேரளாவில் உள்ள ஹரிப்பாத், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசுகிறார் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஹரிப்பாத் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ரமேஷ் சென்னிதாலா போட்டியிடுகிறார். ஏப்ரல் 9-ம் தேதி கோட்டயம்,கொல்லம் ஆகிய நகரங்களில் நடக்கும் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சல்மான் குர்ஷீத்,வீரப்ப மொய்லி, விலாஸ்ராவ் தேஷ்முஹ் ஆகியோரும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள். மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஏற்கனவே கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார். இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் நேற்றுமுதல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago