முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முதல்வராக நயாப் சைனி வரும் 17-ம் தேதி பதவியேற்கிறார்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      இந்தியா
Modi-Nayab-Singh-Saini 2024

Source: provided

புதுடெல்லி : இரண்டாவது முறையாக அரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் 17-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அம்மாநிலத்தின் பஞ்ச்குலாவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பிரதமர்  மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழாவுக்கு முன்பாக நடைபெற இருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், நயாப் சிங் சைனி பா.ஜ.க.வின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தப் பதவியேற்பு விழா ஏற்பாடுகளை கண்காணிக்க மாநிலத் தலைமைச் செயலாளரால் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பஞ்சகுலா மாவட்ட ஆணையர் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மோகன்லால் கட்டாருக்கு பதிலாக அரியானா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவர் நயாப் சைனி. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நயாப் சைனி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை கட்சி சுட்டிக்காட்டியிருந்தது. இவர் மாநிலத்தின் முக்கிய வாக்கு வங்கியான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்.

அரியானாவில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பத்தாண்டு கால ஆட்சி மீதான எதிர்ப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போன்றவைகளையும் மீறி அரியானாவில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றது. மாநிலத்திலுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. 48 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.  அரியானாவில் ஐ.என்.எல்.டி. கட்சி 2 இடங்களை கைப்பற்றியது. சாவித்ரி ஜிண்டால் உட்பட மூன்று சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். அவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து