எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரே மாற்றமாக பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பும்ரா இடம்பெறாததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை" என்று பதிவிட்டுள்ளது.
_____________________________________________________________________________
மே.இ.தீவுகள் அணி வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றிய அசத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் இங்கிலாந்து அணியை 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கி அசத்தினர்.
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை எந்தவித சிரமமுன்றி எதிர்கொண்ட எவின் லூயிஸ் - பிரண்டன் கிங் விரைவாக ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங் நிதானமாக விளையாட, மறுமுனையில் லூயிஸ் அதிரடியில் வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்த நிலையில், கிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் இலக்கை நெருங்கும் வேளையில் 94 ரன்களில் ஆட்டம் இழந்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 25.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
_____________________________________________________________________________
ரசிகர்களுக்கும் கான்வே நன்றி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது. இருப்பினும் அந்த அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட இந்தியாவை சேர்ந்த தீபக் சாஹர், நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்சின் ரசிகர்களிடையே பெயர் பெற்றவர்கள்.
அதிலும் குறிப்பாக கான்வே 2022 மற்றும் 2023 ஆகிய 2 சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும், 2023 சீசனில் சென்னை அணி கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் சென்னை அணியின் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர். தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாத நிலையில் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அற்புதமான 2 வருட ஆதரவிற்காக சிஎஸ்கே-வின் அனைத்து விசுவாசமான ரசிகர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
06 Dec 2025சென்னை : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
காயத்தில் இருந்து மீண்டார்: டிச. 9-ம் தேதி டி-20 போட்டியில் களம் காண்கிறார் ஷுப்மன் கில்
06 Dec 2025மும்பை : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் வருகிற டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் ஷுப்மன் கில் மீண்டும் இந்திய அணியில் இணையவுள்ளார்.
-
லண்டன் பல்கலை.,யில் ஆய்வு படிப்பிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிகலாம்:அரசு அறிவிப்பு
06 Dec 2025லண்டன், அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்; 'டிரா' செய்தது வெஸ்ட் இண்டீஸ்
06 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி டிரா செய்தது.
-
48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது : முதல் போட்டியில் ஆர்ஜென்டீனா-அல்ஜீரியா மோதல்
06 Dec 2025லண்டன் : 48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது. இதில் முதல் போட்டியில் ஆர்ஜென்டீனா-அல்ஜீரியா மோதுகின்றன.
-
டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு: மத்திய அரசு தகவல்
06 Dec 2025புதுடெல்லி, டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்திய பயணம் நிறைவு: ரஷ்யா சென்றார் புதின்
06 Dec 2025டெல்லி, இந்திய பயணத்தை நிறைவு செய்து விட்டு புதின் ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார்.
-
அம்பேத்கர் கொள்கை பாதையில் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா
06 Dec 2025டெல்லி, சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று அவர் புகழைப் போற்றுவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித
-
சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சென்னை கோர்ட் தீர்ப்பு
06 Dec 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வேண்டும் என்று சென்னை கோர்ட் தீர்ப்பளித்தது.


