முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
Acctnet

Source: provided

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பால்காரன் சாலைப் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துக் கொண்டு 5 பேர் காரில் பயணித்துள்ளனர்.  ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று அதிகாலை சிறுமுகை சத்தியமங்கலம் சாலையில் 5 பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பால்காரன் சாலைப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, காரை ஓட்டி வந்த சுவாமி என்பவர் தூக்கக் கலக்கத்தில் காரை சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியுள்ளார்.  இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் வெங்கடஆதிரி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து