முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று (மார்ச் 14-ஆம் தேதி) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,230-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது. இதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று முன்தினம் புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.55 என பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120, ஒரு பவுன் ரூ.64,960 என உயர்ந்தது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.65,000-ஐ நெருங்கியது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த புதிய உச்சம் திருமணம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக தங்கம் வாங்கும் சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து