முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

சென்னை, தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் கும்பகோணத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. தேவையென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

அதனைத் தொடர்ந்து நேற்று விருத்தாச்சலம் வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது. அதுவும் நான் உட்காரும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி எனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை யார் வைத்தார்கள். எதற்காக வைத்தார்கள் என்று விசாரித்து வருகிறோம் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, பா.ம.க.வின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், திடீரென, இப்படியொரு குற்றச்சாட்டை ராமதாஸ் முன் வைத்துள்ளது பா.ம.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து