முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      உலகம்
Visa H-1B 2023 06 28

நியூயார்க்,  மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்​-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணம் ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்தப்படும் என்றும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியையும் உயர்த்தி வருகிறார்.

இதனிடையே, கடந்த ஜூலை 4-ம் தேதி ‘ஒரு மிகப்பெரிய அழகிய மசோதா' என்ற மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கி உள்ளார். அதன்படி, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக்கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இருப்புத்தொகை என்ற பெயரில் இந்தத்தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த இருப்புத்தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விசா காலாவதியானவுடன் நீட்டிப்பு கோராமல் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுபவர்களுக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து