முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. கடந்த வாரம் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான், 'வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்' என தெரிவித்தார்.

லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதால், சிராக் பஸ்வானின் இந்த அறிவிப்பு பீகாரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து