முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      உலகம்
Earthquack 2024-12-06

வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி 12.37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து உள்ளது. இதனால், இங்கு அடிக்கடி  நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

எனினும், சமீப காலமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது மக்களை பீதி அடையவைத்து இருக்கிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு நிலநடுக்கம் அலஸ்காவில் ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலஸ்காவின் வளைகுடா மற்றும் ஹவாய், அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து