முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்: கோவில்பட்டியில் இ.பி.எஸ். உறுதி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      தமிழகம்
EPS 1-2025-08-01

கோவில்பட்டி, தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்துக்காக நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து நேற்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் பேசும்போது, தீப்பெட்டி தொழிலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என  வலியுறுத்தினார்.

 கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கே.கண்ணன் பேசுகையில்,  அதிக புரதச்சத்து கொண்ட கடலைமிட்டாயை சத்துணவு திட்டத்தில் இணைக்க  வேண்டும்”, என்றார்.

தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:   அ.தி.மு.க. ஆட்சியின் போது தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுத்தோம்.

இப்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.. தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள லைட்டர்களை தடை செய்ய வேண்டும். இதற்காக அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.  நாங்களும் மத்திய அரசை தொடர்பு கொண்டு பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தாமிரபரணி - வைப்பார் திட்டம் தி.மு.க. ஆட்சியில்  கிடப்பில் போடப்பட்டது. அந்த் திட்டம் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொடங்கப்படும்.  விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தி தொழில் சிறக்க அ.தி.மு.க. என்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் செ.ராஜூ வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் சி.விஜயபாஸ்கர்.தளவாய் சுந்தரம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஐக்கிய கிறிஸ்தவ பேரவையை சேர்ந்தவர்கள், திருநெல்வேலி தெட்சிண மாற நாடார் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். அதேபோல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து