முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய தேர்பவனி: பக்தர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Velangkanni 2024-03-29

Source: provided

வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்கிறாா்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதைப்போல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதாமன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார மாதா பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தேர் பவனியையொட்டி தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடந்தது. தொடர்ந்து புதுவை- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருப்பலியைத் தொடர்ந்து புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தேரை புனிதம் செய்தார். இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒலிக்க, மின்விளக்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது. தேர் புறப்பட்டதும் பேராலயத்தைச் சுற்றி திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி மரியே வாழ்க என கோஷமிட்டு பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல்சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோர்பவமாதா, புனித உத்திரிய மாதா ஆகிய தேர்கள் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் அணிவகுத்து சென்றன.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் வலம் வந்தன. அப்போது தேரை பின் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேராலயத்தை சுற்றி தேர் வலம் வந்த போது மக்கள் தேர் மீது பூக்களைத் தூவி ஜெபித்தனர். தேர் பவனி பேராலயம் முன் வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர் பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குதந்தை, நிர்வாகதந்தை பரிசுத்தராஜ், விடுதிகள பொறுப்பாளர் ஆரோஜேசுராஜ், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல்அலுவலர் பொன்னுசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், சமூக ஆர்வலர் கிங்ஸ்லி ஜெரால்டு, ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் பயஸ்வில்சன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் செல்வராஜன், நிர்வாக பங்கு தந்தையர், அருட் சகோதரிகள், வேளாங்கண்ணி கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து