முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல ரவுடி நாகேந்திரனின் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      தமிழகம்
Nagendran 2025-10-10

Source: provided

சென்னை : பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 52). ஏ பிளஸ் ரவுடியான இவர் வியாசர்பாடி பகுதியில் ரவுடிகள் மத்தியில் நாகு என்றும், பெரியவர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் மீது 5 கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 26 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இவர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்றுவிட்டார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நாகேந்திரனும் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு மூலம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவருக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலையில் நாகேந்திரனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.சிகிச்சை பலன் அளிக்காமல் நாகேந்திரன் உயிரிழந்தார். 

அவரது உடலின் இறுதி சடங்குகள் அவர் முதலில் வசித்த வியாசர்பாடி பகுதியில் நடக்கும் என்று குடும்பத்தினர் அறிவித்திருந்தனர். நாகேந்திரனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரது மூத்த மகன் அஸ்வத்தாமனும் கோர்ட்டு அனுமதியுடன் பரோலில் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். நாகேந்திரன் மறைவால் வியாசர்பாடி பகுதி பெரும் பதற்றமாக உள்ளது. அங்கு போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நாகேந்திரன் மரணம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சூழலில் நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரனின் உடலை தங்கள் தரப்பு மருத்துவர் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவரது மனைவியின் அவசர முறையீட்டை ஐகோர்ட் ஏற்க மறுத்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்தார். எனினும், நாகேந்திரன் மனைவியின் மனு பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 1 மணிக்கு மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார், "நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற வேண்டும். பிரேத பரிசோதனை நிகழ்வுகள் வீடியோவாகவும் பதிவு செய்ய வேண்டும். மேலும், முக்கிய உடல் உறுப்புகளை கெடாமல் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து