முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம்: தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      தமிழகம்
Kandaleru-Dam 2023-09-19

Source: provided

சென்னை : சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாகவும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 4000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும் அணையிலிருந்து வினாடிக்கு 4000 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்றப்படலாம் என தெரிவித்துக்கொள்ளபடுகிறது.

மேலும் தீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொருத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் இருகரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள் ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து