முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்ச வரம்பை ரூ.7 ஆயிரத்துக்கு மிகாமல் நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு குரூப் -சி மற்றும் நான்-கெசட்டட் குரூப் -பி ஊழியர்கள் 2024- 25ம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான "அட்-ஹாக் போனஸ்" பெறுவார்கள் இந்தத் தொகை ரூ.6,908 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதுவை அரசில் பணிபுரியும் குரூப் -பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியில் பணியில் இருந்த மற்றும் 2024- 25 ஆண்டில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான சேவை தந்த ஊழியர்கள் மட்டுமே இந்த உத்தரவுகளின் கீழ் போனஸ் பெறலாம். குறிப்பாக 3 ஆண்டுகள் அதற்கு மேல் பணிபுரிந்தோர் போனஸ் பெற தகுதியுடையவர்கள். போ

னஸை அந்தந்த துறைகளின் அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ஈடு செய்ய வேண்டும். மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலை அனைத்துத் துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து