முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னுடயை அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது: மோஷின் நக்வி

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      விளையாட்டு
ICC 2023 07 29

Source: provided

லாகூர் : தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

சாம்பியன் பட்டம்... 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற மறுத்ததையடுத்து, கோப்பையை ஆசிய கோப்பை நிர்வாகமே எடுத்துச் சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிடம் இன்னும் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.இந்த நிலையில், தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பையை...

இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசிய கோப்பை துபையில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை தன்னுடைய அனுமதியின்றி எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது எனவும், யாரிடமும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெளிவாக கூறியிருக்கிறார். வெற்றி பெற்ற அணிக்கு அல்லது பிசிசிஐ நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும், தன்னுடைய கைகளினால் மட்டுமே வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிடம் ஆசிய கோப்பை ஒப்படைக்கப்பட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து